வெட்டப்படும் மரங்கள்

Update: 2023-04-23 11:54 GMT

கரூர் மாவட்டம், கந்தம்பாளையம் அண்ணாநகர் செல்லும் பிரிவு சாலையிலிருந்து கொடுமுடி செல்லும் தார்சாலையின் இருபுறமும் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு நிழல் தரும் மரங்களை அப்போதைய அரசு நட்டு வளர்த்து வந்தது. தற்போது பெரிய மரங்களாக உருவாகி இருக்கிறது. இந்நிலையில் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் ஒப்பந்ததாரர்கள் இருபுறமும் உள்ள அனைத்து மரங்களையும் தொடர்ந்து வெட்டி அகற்றி வருகின்றனர். இதனால் தார் சாலை நெடுகிலும் இருபுறமும் வெறிச்சோடி காட்சியளிக்கிறது. நீதிமன்றம் அவசரம் அவசியம் கருதி மரங்களை அகற்றும்போது அதன் அருகே அந்தப்பகுதிகளில் புதிதாக மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அவசியமில்லாமலேயே மரங்களை வெட்டி எடுத்து வருகின்றனர். எனவே இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்