விருத்தாசலத்தில் அரசு கொளஞ்சியப்பர் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரிக்கு கடலூர் மாவட்டம் மட்டும் இன்றி விழுப்புரம், கள்ளக்குறிச்சி போன்ற பகுதி்யில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கல்லூரிக்கு செல்ல போதுமான அளவு பஸ் வசதி் இல்லாததால், படிக்கட்டுகளில் மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்து வருகின்றனர். எனவே விபரீதம் நிகழும் முன் கல்லூரி நேரங்களில் கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?