கிள்ளை போலீஸ் நிலைய குடியிருப்புகள் சுமார் 20 ஆண்டு காலமாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் போலீசார் வேறு இடங்களில் தங்கி, பணிபுரிந்து வருகின்றனர். எனவே போலீஸ் குடியிருப்பு கட்டிடங்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே போலீசாரின் எதிர்பார்ப்பாக உள்ளது.