காஞ்சீபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் வண்டலூர் ஊராட்சி ஓட்டேரி விரிவுப்பகுதியில் உள்ள 2-வது அங்கன்வாடி மையக்கட்டிடம் ஆனது பராமரிப்பின்றி இருக்கிறது. இதனால் பாம்பு போன்ற விச ஜந்துக்குக்களின் நடமாட்டம் அதிகளவு உள்ளது. இதனால் குழந்தைகள் அருகில் உள்ள மற்றொரு வளாகத்தை உபயோகப்படுத்தி வருகின்றனர். இப்பகுதி குழந்தைகளின் நலன் கருதி அங்கன்வாடியை சீரமைத்து, கட்டிடத்தை ஒட்டியுள்ள முட்புதர்களை அப்புறப்படுத்தி தர வேண்டும்.