விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் குரங்குகள் தொல்லை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இவை ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் கையில் இருக்கும் தின்பண்டங்களை பிடுங்கி செல்வதோடு, விரட்ட வரும் பயணிகளை கடிக்க சீறிப்பாய்கின்றன. இதனால் பயணிகள் அச்சப்படுகின்றனர். எனவே பயணிகளை அச்சுறுத்தி வரும் குரங்குகளை பிடித்து, அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.