விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பிள்ளையார் கோவில் தெருவில் அதிக அளவில் வணிக நிறுவனங்கள் இருப்பதால் பாதையை அடைத்து வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. மேலும் சரக்கு வாகனங்கள் சாலையின் நடுவே நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனால் அப்பகுதி மக்கள் நடந்து செல்வதற்கு கூட மிகுந்த சிரமப்படுகிறார்கள். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.