மருத்துவமனை வாசலில் ஆக்கிரமிப்பு ஏன்?

Update: 2022-04-23 14:34 GMT
சென்னை ராயப்பேட்டை பேகம் சாகிப் தெருவில் சமுதாய நல மருத்துவமனை ஒன்று உள்ளது. பெரும்பாலான கர்பிணி பெண்கள் மற்றும் முதியோர் சிகிச்சை பெறுவதற்கு வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையின் வாசலில், அப்பகுதியில் இருக்கும் வாகனங்கள் அதிகப்படியாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இரவு நேரங்களில் ஆம்புலன்ஸ்களை திருப்புவதற்கு மிகவும் சிரமமாக இருக்கின்றது. மருத்துவமனை அருகே தேவையில்லாமல் நிற்கும் வாகனங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்