சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பு

Update: 2023-04-12 14:35 GMT

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், ஸ்ரீ புரந்தான் காலனி தெருவில் உள்ள சுடுகாட்டிற்கு செல்லும் சுடுகாட்டுப்பாதை மிகவும் மோசமாக உள்ளது. காலனி தெருவில் இருந்து சுடுகாடு வரை உள்ள பாதை குண்டும், குழியுமாக இருப்பதோடு பாதையில் இரு பக்கங்களிலும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு பாதை மிகவும் குறுகிப்போய் உள்ளது. இதனால் இறந்தவர்களை அவ்வழியாக தூக்கிச் செல்லும்போது மிகவும் சிரமம் அடைய வேண்டி உள்ளது. எனவே ஆக்கிரமப்புகளை அகற்றி சுடுகாட்டு பாதையை சரி செய்திட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்