தென்காசி மாவட்டம் கடையம் அருகே முதலியார்பட்டி காந்திநகர் பகுதியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையோரம் தண்ணீர் வீணாக பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்கு சேறும் சகதியுமாக காட்சியளிப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் சாலையும் சேதமடைகிறது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.