ஆத்தூர் தாமிரபரணி ஆற்றின் பழைய பாலத்துக்கும், புதிய பாலத்துக்கும் இடையில் சிலர் இறைச்சி கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதனால் அங்கு சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் அங்கு சுற்றி திரியும் தெருநாய்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் விபத்துகளும் நிகழ்கின்றன. இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.