திருச்செந்தூர் பந்தல் மண்டபம் சிவன் கோவில் தென்புறம் உள்ள இலவச பொது கழிப்பறை புதுப்பிக்கப்பட்டது. பின்னர் அதனை பல நாட்களாக திறக்காததால் காட்சிப் பொருளாக உள்ளது. எனவே அதனை திறந்து பொதுமக்கள், பக்தர்கள் பயன்படுத்துவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.