திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஆமூர் ஊராட்சியில் உள்ள நூலகம் பெரும்பாலும் பூட்டியே கிடக்கிறது. இதனால் புத்தகங்கள் மற்றும் பத்திரிக்கைகளை வாசிக்க முடியாமல் மாணவர்கள், வாசகர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே நூலத்தை தினமும் திறக்க வேண்டும் என்று வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.