பெண்ணாடம் பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழக அரசின் சார்பில் அண்ணா அரங்கம் அமைக்கப்பட்டிந்தது. இதில் அரசியல் கட்சி கூட்டம், கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்று வந்தது. தற்போது இந்த அரங்கம் பலத்த சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த அரங்கத்தில் நிகழ்ச்சிகள் நடத்த அரசியல் கட்சியினர் பெரும் அச்சம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.