சேதமடைந்த மூடி, துர்நாற்றத்தால் அவதி

Update: 2022-04-23 14:21 GMT

சென்னை மங்களபுரம் கிருஷ்ணதாஸ் மெயின் ரோடு, டாக்டர் ஆறுமுகம் கிளினிக் அருகில் மழைநீர் வடிகால்வாய் மூடியின் ஒரு பகுதி சேதமடைந்து ஓட்டை விழுந்துள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதால், இப்பகுதியை கடந்து செல்லும் போது பாதசாரிகள் மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் நிலையுள்ளது. எனவே உடைந்த மூடியை மாற்றி தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்