பெண்ணாடம் அடுத்த பெ.பூவனூர் ஊராட்சியில் ஓ.கீரனூர் கிராமத்தில் உள்ள துணை சுகாதார நிலையம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாடின்றி பாழடைந்து காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக வெகுதூரம் செல்லும் நிலை உள்ளது. எனவே பாழடைந்து கிடக்கும் சுகாதார நிலையத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டி, கிராம மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.