சென்னை ராமாபுரம் சாந்தி நகர் மெயின் ரோட்டில் உள்ள பாதாள சாக்கடை சேதமடைந்து அபாயகரமாக காட்சி தருகிறது. இரவில் பயணிப்பவர்கள் கவனக்குறைவால் இதில் தவறி விழுவதும், அதனால் பலத்த காயங்கள் ஏற்படுவதும் வாடிக்கையாகி வருகிறது. அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சேதமடைந்த பாதாள சாக்கடை சரிசெய்யப்படுமா?