பயன்பாட்டில் இல்லாத பொதுக் கழிப்பிடம்

Update: 2022-04-20 14:07 GMT
சென்னை கொளத்தூர் ஸ்ரீ சக்தி திருவீதி அம்மன் கோவில் அருகே உள்ள மாநகராட்சி பொது கழிப்பிடம் நீண்ட நாட்களாக செயல்படாமல் பராமரிப்பின்றி இருக்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் நிலையுள்ளது. அருகே பள்ளி இருப்பதால் பள்ளிக் குழந்தைகளின் உடல் நலன் மற்றும் இந்த பகுதியில் உள்ள மக்களின் நலன் கருதி பொதுக் கழிப்பிடத்தை சுத்தப்படுத்தி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்