கடலூர் மஞ்சக்குப்பம் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு உள்ள அறிவியல் பூங்கா பாழடைந்து கிடக்கிறது. இதில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்து காணப்படுவதால், பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை பூங்காவிற்கு அழைத்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே பூங்காவை சீரமைக்க வேண்டியது அவசியம்.