திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் அருகே உள்ள வேன் ஸ்டாண்டின் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. தேங்கிய நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார கேடும் ஏற்படுகிறது. குடிநீர் குழாய் உடைப்பை தற்காலிகமாக மணலை கொட்டி மூடி வைத்ததால் குடிநீர் வீணாகிறது. குடிநீர் குழாயை நிரந்தரமாக சரி செய்ய கேட்டுக்கொள்கிறேன்.