காயல்பட்டினம் நகராட்சி 9-வது வார்டு லட்சுமிபுரம் பகுதியில் பல ஆண்டுகளாக சாலை அமைக்கவில்லை. மேலும் குடிநீர், தெருவிளக்கு வசதிகளும் சரிவர நிறைவேற்றப்படாததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு போதிய அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.