திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையின் கட்டிடம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் கடைக்கு வரும் பொதுமக்கள் இடிந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.