தொழுதூர்-கீழ்கல்பூண்டி செல்லும் வழியில் ஆனவரி ஓடையில் பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இருப்பினும் பணிகள் முழுவதும் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் ஓடையை கடக்க முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்ட பாலம் கட்டும் பணியை தொடங்கி முடிக்க வேண்டும்.