நெல்லிக்குப்பம் சாலிவாகனத்தெருவை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து வருகின்றனர். இதனால் அப்பகுதி சாலை மிகவும் சுருங்கிப்போய் விட்டது. இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் அதிகமானால் எதிர்காலத்தில் நடந்து செல்ல கூட இடம் இருக்காது என்று அப்பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லை. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.