கடலூர் துறைமுகம் பச்சையாங்குப்பம் ஹவுசிங்போர்டு முதல் இரட்டை ரோடு வரை சாலையின் இருபுறமும் மண் குவியல்கள் இருந்தது. இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உருவானது. இதுகுறித்த செய்தி தினத்தந்தி புகார்பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாாிகள் மண் குவியல்களை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுத்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர்.