விபத்தில் சிக்கிய காரால் இடையூறு

Update: 2022-07-20 16:55 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள தங்கநகரம் கிராமத்தின் குடியிருப்பு பகுதியில் சில தினங்களுக்கு முன்பு லாரியும்-காரும் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய கார் விபத்து நடந்த இடத்தில் இருந்து அற்றப்படாமல் அங்கேயே நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஏதோ விபத்து நடந்தது போல் வாகனத்தை நிறுத்தி பார்த்து செல்கின்றனர். இதனால் அந்த வழியாக மற்ற வாகனங்களில் செல்வோருக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்தில் சிக்கிய காரை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்