ஆலங்குளம் தாலுகா மருதம்புத்தூர் பஞ்சாயத்து கண்டப்பட்டி வழியாக இலந்தைகுளம் செல்லும் சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.