சென்னை கொடுங்கையூர் வேதாந்த முருகப்பா முதல் தெருவில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. தினமும் பணி முடிந்து இரவில் வீடு திரும்பும் மக்களை விரட்டுவதும், வாகனத்தில் செல்பவர்களை பார்த்து குரைப்பதும் வாடிக்கையாகி வருகிறது. இதனால் இந்த பகுதியில் நடந்து செல்லவே குழந்தைகள் மற்றும் பெண்கள் அச்சப்படுகிறார்கள். தெரு நாய்கள் தொல்லை கட்டுப்படுத்தப்படுமா?