நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா வெண்மனி கிராமத்தில் மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை விளைநிலங்களுக்குள் கூட்டமாக புகுந்து பயிர்களை சேதபடுத்தி அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். விளைநிலங்களுக்கு வேலி அமைத்தாலும் மாடுகள் அவற்றை தள்ளிக்கொண்டு உள்ளே புகுந்துவிடுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விவசாயிகள் நலன் கருதி விளைநிலங்களுக்கு புகுந்து அட்டகாசம் செய்யும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?