சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான வார்டுகளில் உள்ள பொதுக்கழிப்பறைகள் தகுந்த பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் நகர மக்கள் பொதுக்கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் இதன் காரணமாக நகர மக்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிக்கும் நிலை உள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே பொதுக்கழிப்பறையை தகுந்த முறையில் பராமரிக்க வேண்டும் என்பதே நகர மக்களின் எதிர்பார்ப்பாகும்.