அரியலூர் செட்டிஏரி கரை பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகள் சிதிலமடைந்து கற்கள் பெயர்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் முதியவர்கள், பெண்கள் இந்த நடைபாதையில் நடை பயிற்சி மேற்கொள்ள முடியாமல் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பெயர்ந்துள்ள நடைபாதையை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.