சேலம் - கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அடரி ஊராட்சியில் பஸ் நிறுத்தம் உள்ளது. ஆனால் இதில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாததால், பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறிச்செல்கின்றனர். எனவே பயணிகள் நலன் கருதி நிழற்குடை அமைக்க வேண்டியது அவசியம்.