கடலூர் துறைமுகம் அருகே ஐந்து கிணறு அம்மன் கோவில் தெருவில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இவைகள் குப்பைகளை கிலறியும், சேற்றில் புரண்டும் எழுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துா்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.