விருதுநகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மருளூத்து மற்றும் பட்டம்புதூர் கிராமங்களுக்கு இடையே உள்ள கண்மாயில் நூற்றுக்கணக்கான மான்கள் வாழ்கின்றன. கோடைக்காலத்தில் தண்ணீருக்காக தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது அவை வாகனங்களால் அடிபடுகின்றன. எனவே வன விலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு தேசிய நெடுஞ்சாலையை அருகே உள்ள கண்மாயில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும். மேலும் அவற்றிற்கு தண்ணீர்த்தொட்டிகளும் ஆங்காங்கே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.