மரக்கிளைகள் வெட்டப்படுமா?

Update: 2023-02-26 10:57 GMT
மரக்கிளைகள் வெட்டப்படுமா?
  • whatsapp icon

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தேரழந்தூர் பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக கட்டிடத்துக்கு இடையே பெரிய மரம் ஒன்று உள்ளது. இந்த நிலையில் மரத்தின் கிளைகள் அந்த வழியாக செல்லும் மின்கம்பிகளை உரசியபடி உள்ளது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. பலத்த காற்று வீசும் போது மரக்கிளைகள் அசைந்து மின்கம்பிகளில் இருந்து தீப்பொறி வெளியாகிறது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மரக்கிளைகளை வெட்டிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்