மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தபால் நிலையத்தில் ஆதார் மையம் செயல்பட்டு வந்தது. தற்போது இந்த மையம் முறையாக திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஆதார் அட்டை பதிவு செய்ய வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மேலும், தபால் நிலையத்துக்கு வருபவர்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆதார் மையம் மீண்டும் செயல்பாட்டுக்கு வர நடவடிக்கை எடுப்பார்களா?