கடலூர் வில்வநகரில் கோவில் குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த குளத்தில் ஆகாயத்தாமரை வளர்ந்து பச்சை பசேல் என வயல்வெளி போல காணப்படுகிறது. இதனால் குளத்தில் தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளதால், நிலத்தடி நீர்மட்டமும் குறையும் அபாயம் உருவாகி வருகிறது. எனவே குளத்தை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.