அரியலூர் மாவட்டம், கீழ்ப்பழுவூர் காந்தி நகர் பகுதியில் தனியார் சிமெண்டு ஆலை மற்றும் குடியிருப்புகள், அரசு சிறப்பு மாதிரிப் பள்ளி, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம், அரசு பாலிடெக்னிக் கல்லூரி, வட்டார போக்குவரத்து அலுவலகம், எஸ்.பி.ஐ. பயிற்சி நிறுவனம், சாய்பாபா கோவில் மற்றும் மக்கள் குடியிருப்புக்கள் அமைந்துள்ளன. இங்குள்ளோர் அஞ்சல் சேவைகளுக்கு 2 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளது .இதனால் அலைச்சலும், காலவிரயமும் ஏற்படுகின்றன. எனவே திருச்சி மத்தியப் பகுதி அஞ்சல் துறையின் சார்பில் இப்பகுதியில் பகுதி நேர அஞ்சலகம் ஏற்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.