கரூர் மாவட்டம், நன்செய் புகழூர் ஊராட்சி மோதுகாடு அருகில் புகழூர் வாய்க்காலில் இருந்து பள்ள வாய்க்கால் பிரிகிறது. இந்த பள்ளவாய்க்கால் வழியாக செல்லும் தண்ணீரை பயன்படுத்தி தவுட்டுப்பாளையம், நன்செய் புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் வெற்றிலை, கோரை, கரும்பு ,நெல், வாழை உள்ளிட்ட பல்வேறு பணப் பயிர்களை விவசாயிகள் செய்து வருகின்றனர். தவுட்டுப்பாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையின் அருகே பள்ள வாய்க்கால் செல்கிறது. இந்த பள்ளவாய்க்காலையொட்டி வாகனங்கள் சென்றுவர பாதை அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த பாதைக்கு செல்வதற்கு பாலம் இல்லாததால் விவசாயிகள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தேசிய நெடுஞ்சாலை அருகே பள்ள வாய்க்காலின் குறுக்கே புதிதாக பாலம் கட்டிக்கொடுத்து விவசாயிகளுக்கு உதவ வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.