சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் எதிரே உள்ள வானவில் பஸ் நிலையத்தில் நிழற்குடை இல்லை. இதனால் வெயில் காலத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். எனவே முதியவர்கள், பெண்களின் நலன் கருதி இந்த பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைத்து தர வேண்டும்.