கோத்தகிரி மார்க்கெட் திடல் பகுதி, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நடைபாதையை புதர் செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்து உள்ளதால் மாணவ-மாணவிகள் உள்பட பொதுமக்கள் அவ்வழியாக நடந்து செல்ல முடிவதில்லை. மேலும் விஷ ஜந்துகள் நடமாட்டமும் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லவே அச்சப்படுகிறார்கள். எனவே புதர் செடிகளை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.