சிதம்பரம் அருகே கொடியாளம் கிராமத்தில் வாய்க்காலுக்கும், சாலைக்கும் இடையே தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. இருப்பினும் இந்த பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இதில் பொதுமக்கள் யாரேனும் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பள்ளத்தை மண் கொட்டி மூட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
