மகப்பேறு மருத்துவர் இல்லை

Update: 2022-07-20 07:51 GMT

கூடலூர் தாலுகா தலைமை அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு உள்பட மருத்துவர்கள் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் கூடலூர், பந்தலூர் தாலுகா மக்கள் அவசர காலங்களில் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக மகப்பேறு மருத்துவர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளதால் கர்ப்பிணிகளை 52 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை தொடர்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்