திருச்சி மாவட்டம், முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கானவர்களும், சனி, ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து செல்கின்றனர். ஆனால் இங்குள்ள பூங்காவில் சிறுவர் ஊஞ்சல், சறுக்குபடி போன்ற பல விளையாட்டு சாதனங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளதோடு உட்கார்ந்து தின்பண்டங்கள், உணவுகள் சாப்பிட முடியாத அளவிற்கு குரங்குகளின் தொல்லைகளும் அதிகரித்து காணப்படுகின்றன. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.