பாபநாசத்தில் இருந்து கடையம், தென்காசி வழியாக மதுரைக்கு இயக்கப்படும் பஸ்கள், கடையம் பஸ் நிலையத்துக்கு செல்லாமல் மெயின் ரோட்டிலேயே நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இதனால் பஸ் நிலையத்தில் நீண்ட நேரம் காத்து நிற்கும் பயணிகள் ஏமாற்றமடைகின்றனர். எனவே அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்துக்கு வந்து செல்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.