சென்னை அடையாறு, பெசன்ட்நகர், திருவான்மியூர், மந்தைவெளி பகுதிகளில் 8 மசூதிகள் உள்ளன. ஆனால் இஸ்லாமியர்களுக்கு என தனி அடக்கஸ்தலம் இல்லை. இதனால் மேற்கண்ட பகுதிகளில் இறந்த முஸ்லீம்களின் உடல்களை அடக்கம் செய்ய, ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலைக்கு எடுத்து செல்ல வேண்டியுள்ளது. எனவே எங்களது சிரமத்தை உணர்ந்து, பெசன்ட்நகர் மயானத்திலோ அல்லது அருகில் உள்ள வேறு எதாவது இடத்திலோ முஸ்லீம்களுக்கான அடக்கஸ்தலத்தை ஏற்படுத்தி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.