தபால் அலுவலகம் திறக்கப்படுமா?

Update: 2023-02-08 11:33 GMT


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி மேலத்தெருவில் தபால் அலுவலகம் இயங்கி வருகிறது. ஆனால் அது தற்போது சரியாக செயல்படவில்லை பணம் எடுக்க சென்றாலும் பணம் கட்ட சென்றாலும் செயல்பட வில்லை என்று பணிபுரியும் தபால் அதிகாரி கூறுகிறார். மேலும் தபால் அலுவலகத்தை சீக்கிரம் பூட்டிவிடுகின்றனர்.இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருமணஞ்சேரி

மேலும் செய்திகள்

மயான வசதி