மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா, கொத்தங்குடி ஊராட்சியில் பனங்குடி கிராமம் உள்ளது. இங்குள்ள மாரியம்மன் கோவில் தெருவில் மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதன்காரணமாக மழைக்காலங்களில் சாலையிலும், வீடுகளுக்கு முன்பும் மழைநீர் குளம் போல் தேங்குகிறது. இதனால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இவற்றால் அந்த பகுதியில் உள்ள குழந்தைகள், முதியவர்கள் தொற்று நோயினால் பாதிக்கப்படுகி்ன்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் மழைநீர் வடிகால் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.