உளுந்தூர்பேட்டை நாராயணா திரையரங்கு பஸ் நிறுத்தம் அருகே வாகனத்தில் இருந்து மீன்களை இறக்கி விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர். அப்போது சிலர் கெட்டுப்போன மீன்களை அங்கேயே வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க வேண்டியது அவசியம்.