சிதம்பரம் நகரில் நான்கு வீதிகள், வேணுகோபால் பிள்ளை தெரு, எஸ்.பி.கோவில் தெரு, சபாநாயகர் தெரு, காந்தி சிலை, பஸ் நிலையம், கீழ வீதி உள்ளிட்ட பகுதி சாலைகளில் போக்குவரத்து இடையூறாக மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால் வாகன் ஓட்டிகள் அவதிப்படுவதோடு, விபத்து ஏற்படும் அபாயமும் உருவாகி வருகிறது. இதை தவிர்க்க நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.