சிதம்பரம் நகரத்தில் உள்ள காந்தி சிலை, எஸ்.பி.கோவில் தெரு போன்ற பகுதிகளில் வாகனங்கள் அனிவகுத்து செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நொிசல் அதிகமாக ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சிதம்பரத்தில் உள்ள முக்கிய வீதிகளில் சிக்னல் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.